ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த 9 நாட்களாக பல அரசுப் பள்ளிகள் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள்  நெருங்கும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் பல பள்ளிகளில் சரியாக நடைபெறவில்லை.


இதை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தேவைக்கு ஏற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றியும்  தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.