தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடுவதற்கான அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!
தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!
தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றுவதற்காக மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க தமிழக அரசு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்திற்கு ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். தற்போது தனியார் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 71 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பசுமையை உருவாக்க தமிழக அரசு, 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது" என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.