நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி நேற்றுடன் முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தனது, தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, பின்னர் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை கடந்த மார்ச் 19 ஆம் தேதி திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.


அடுத்த நாள் மார்ச் 20 ஆம் தேதி முதல் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முதல் நாளில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.


அப்பொழுது அவர் பாஜக மற்றும் அதிமுக-வை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐந்தாண்டு காலம் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல், விவசாயப் பொருட்களின் விலை அனைத்தையும் உயர்த்தியவர் மோடி! தமிழகத்தில் அதற்கு எல்லா வகையிலும் துணை நிற்பவர் எடப்பாடி! இருவரையும் வீழ்த்தும் நாள் ஏப்ரல் 18! எனவும் பதிவிட்டுள்ளார்.