தயிருக்கு GST வசூலித்த உணவகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள உணவகத்தில் மகராஜன் என்பவர் பிப்ரவரி 6 ஆம் தேதி தயிர் பார்சல் வாங்கியுள்ளார். அப்போது, தயிருக்கு 40 ரூபாய் கட்டணம், GST இரண்டு ரூபாய், பார்சளுக்கு இரண்டு ரூபாய் என மொத்தம் 44 ரூபாய் வசூலித்துள்ளனர். தயிர், பால், பச்சை காய்கறிகளுக்கு, GST கிடையாது. இது குறித்து கூறியும் கடைக்காரர் பதில் தரவில்லை. எனவே, மகராஜன் சார்பில் வழக்கறிஞர் பிரம்மா, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதையடுத்து, தயிருக்கு GST வசூலித்ததற்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.10,000 வழக்கு செலவுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால், தயிர், காய்கறி போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்ற போதும், ஜிஎஸ்டி வசூலித்ததால் நுகர்வோர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.