குருமூர்த்தி தேவையில்லாமல் கருத்து சொல்லக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, “இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என நான் பயந்தேன்" என்று பேசினார். 


இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு இடத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  தனது பேச்சு குறித்து குருமூர்த்தி ட்விட்டரில் விளக்கம் அளித்தார். அதில் அவர், ஓபிஎஸ்-ஸை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை என எழுதி இருந்தார்.


இது தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த அவர், ‘குருமூர்த்தியிடம் பலரும் கருத்து கேட்டிருப்பார்கள், ஆனால் அதை வெளியே சொல்வது முறையானதல்ல. தேவையின்றி கருத்துகள் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை எல்லா பகுதிகளிலும் போட்டியிட பாஜக விரும்புகிறது. நிலையான அரசு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.