Video: ‘ஒரு நிமிடம் தாருங்கள்’ என்றார் வசந்தகுமார்: அது கிடைக்கவில்லை, கிடைத்தது Mic Off!!
கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளிக்கிழமையன்று இறந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார், மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக வெள்ளிக்கிழமையன்று இறந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எச்.வசந்தகுமார் (H Vasanthakumar) , மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் (Parliament) கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சினையை எழுப்பியிருந்தார். ஆனால் அவர் குறுக்கிடப்பட்டு அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. “சபாநாயகர் ஐயா, கொரோனா வைரஸை தேசிய பேரழிவாக (National Disaster) அறிவிக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரசை முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு தேசிய பேரழிவாக நாம் அறிவிக்க வேண்டும். பூஜ்ஜிய வருவாய் நிலைமை நிச்சயமாக கடன்களை திருப்பிச் செலுத்துவதை பாதிக்கும். சிறு தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களின் கடன் தொகையை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மாற்றியமைக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாடாளுமன்றத்தின் செயல்பாடு ஒத்திவைக்கப்படாத ஒரு அமர்வின் போது சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார் இந்த பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
ALSO READ: எச்.வசந்தகுமார்-பலரது வாழ்க்கையில் வெற்றிப்படிக்கட்டி வசந்தம் வீசச் செய்த வள்ளல்!!
"தினசரி கூலி தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாய் அளிக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். பேரழிவு முடியும் வரை ஜிஎஸ்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
வசந்தகுமார் பேச இன்னும் ஒரு நிமிடம் கோரினார். ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு வாந்தகுமாரிடம், "மைக் பந்த் (ஆஃப்)" என்று கூறினார். பின்னர் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரை பேச அழைத்து விட்டார்.
கொரோனா வைரசால் வரவிருக்கும் விளைவுகளை வசந்தகுமார் அவர்கள் நன்கு யோசித்து அரசாங்கத்திற்கு அன்றே எச்சரிக்கை விடுத்தார். எனினும், சில நேரங்களில் சிலரது பேச்சு எடுபடாமல் போய்விடுகிறது.
ALSO READ: காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!!