திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்?: HC கிளை
திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி......
திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி......
தமிழகத்தில் திருவாரூர், திருபரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கபட்ட நிலையில், அறிவிப்பு வந்த பிறகு அந்த தொகுதிகளுக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் வடக்கிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும் காரணத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது சரியானது அல்ல என்று கே.கே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்த மனுவை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது.
விசாரணையின் போது, எப்போது அந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தேர்தலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் அளிக்குமாறு கேட்டுள்ள நீதிமன்றம், அட்டவணை தயாராக இருந்தால் அதனை தாக்கல் செய்யுமாறும் தெரிவித்து இந்த மனு மீதான விசாரணையை 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.