ஸ்டாலின் உருக்கமான பேச்சு.. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்: வீடியோ
இன்று 67-வது பிறந்த நாளை காணும் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்த நாள். அவர் தனது தனது 67-வது பிறந்த நாளில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 2 நிமிடங்கள் 15 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார்.
அதில், "சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
சுயமரியாதை - சமூகநீதி - சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள்.
'உங்கள் சகோதரனின் குரல்'' -இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி.
இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! என்று கூறி வீடியோவை பதிவிட்டுள்ளார்.