தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் இணையவழியில் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற நிலையில், அவரது அக்கௌண்டில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை பார்த்து அவர் வியப்படைந்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சிதான் என்றாலும் அவர், உடனடியாக வாடிக்கையாளர் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு 13 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அதிகாரிகள் வங்கிக் கணக்குளை சரிபார்த்தபோது, 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் , பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்கியுள்ளனர். மேலும் 100 பேரது வங்கிக் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வங்கி தரப்பிலிருந்து இதுவரை முறையாக புகார் அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 


100 பேர் மட்டுமின்றி மேலும் சில வாடிக்கையாளர்கள் கணக்கில் ₹10,000, ₹50,000, ₹1 லட்சம் வரவு வைக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு தவறான குறுந்தகவல் சென்றதாக HDFC வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.


 



மேலும், நடந்த தவறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் எனவும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. சென்னை HDFC வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR