Chennai Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த வான்வழி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்து குறித்தும், அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (TN Health Minister Ma Subramanian) இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,"உயிரிழப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இதில் அரசியல் செய்யக்கூடாது. வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குடை, தண்ணீர் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. வெயில் இருக்காது என விமானப்படை கூறவில்லை. எதற்கும் தயாராக வாருங்கள் என்றுதான் கூறி இருந்தார்கள். 


வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு


தேவையான அளவு குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்தது. குறிப்பாக, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது என இந்திய விமானப் படையும் கூறியுள்ளது" என்றார். மேலும் அவர், "விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் இறக்கவில்லை என அரசு கூறவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் 2 முறை ஆலோசனை நடந்தது. மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. 


மேலும் படிக்க | மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ


5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம்தான் காரணம். யாரும் கூட்ட நெரிசலால் உயிரிழக்கவில்லை. இறந்த பின்னரே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை. இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். மருத்துவமனைகளில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாசக நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். 


கூடுதல் ஏற்பாடுகள்


விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தேவையான அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக இந்திய விமானப்படையே நேற்று தெரிவித்திருந்தது. விமானப்படை கேட்டது மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டு. ஆனால் அரசு தரப்பில் 4,000 படுக்கை வசதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் விரிவான ஏற்பாடுகளை இந்திய விமானப்படை அதிகாரிகளே பாராட்டிருந்தனர்.


மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்கு 65 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெயில் உள்ளிட்ட காரணங்களால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 93 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுவிட்டனர்" என்றார்.


அனைத்து துறைகளும் இணைந்து பணிகளை மேற்கொண்டோம் என்றும் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே இருந்த கடைகள் அகற்றப்பட்டு ஏற்பாடு நடந்தது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். 


மேலும் படிக்க | Marina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ