தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் வெப்ப அலை வீசும்? தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
Tamilnadu Heat Wave Update : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
கோடை வெயில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைக் கடந்து கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் எச்சரிக்கையில், " தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?
அதேபோல் உள் கர்நாடகா, தெலுங்கானா, ராயலசீமா, உத்திர பிரதேஷ், கடலோர ஆந்திரா மற்றும் யானம், மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும்" என்று கூறியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நீர் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குழந்தைகளை, பெரியவர்களை வெளியில் அதிகமாக அழைத்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக, குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு குளிர்பானங்களை முழுமையாக தவிர்த்திடுமாறு கோயம்புத்தூரைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். டீ ,காபி வகைகளை குடிப்பதையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக இயற்கையாக விளையக்கூடிய இளநீர், நுங்கு, நன்னாரி வேர், வெந்தயம், சீரகம் எலுமிச்சை கொண்ட பானங்களை பருக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ