6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாயப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 31 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.