தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35 முதல் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.


வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருத்தணி, கடலூர், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லி மற்றும் கலவையில் 6 சென்டிமீட்டரும், அண்ணா பல்கலைக்கழகம், தரமணி, செம்பரம்பாக்கம், மதுராந்தகத்தில் 4 சென்டிமீட்டரும், வடசென்னை, கேளம்பாக்கம், காரைக்கால், வந்தவாசியில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.