தொடர் மழை!! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை பெய்து வரும் காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வரும் காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கே.கே நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது. மேலும் கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலைச்சல் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.