வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேவேளையில், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.