மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக் கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.