தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் கவனத்திற்கு...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
திருவண்ணாமலை மாவட்டதிதல் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்கள், 2019-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆசிரியர்கள் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் பதிலை பெற்று அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60,000 பேர் பணிக்காக காத்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.
கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாதத்திற்கான அவர்களின் ஊதியத்தை வழங்குமாறும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.