உள்ளாடை காட்டி பெண் போலீஸிடம் தகராறு செய்த இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு
உள்ளாடைகளை கழட்டி காட்டி பெண் போலீஸிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் மீண்டும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தஞ்சாவூர் போலீசார் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு முத்தமிழ்செல்வன் மற்றும் ரவி ஆகியோர் கோவில் விளக்கேற்றும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த பெண் காவலர் ஆதி நாயகி கோவில் பகுதியில் மது அருந்தக்கூடாது உடனே கலைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்பொழுது நாங்கள் இந்து முன்னணி கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளதாகவோ கலைந்து போக முடியாது எனக்கூறி பெண் போலீசாரை அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.
மேலும், ஆட்களை திரட்டி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் போலீசார் இணைந்து சென்று மூவரின் கைது செய்தார்கள். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்க தகாத முறையில் நடந்து கொண்ட குபேந்திரன்,
முத்தமிழ்செல்வன் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சை இந்து முன்னணி பிரமுகர் குபேந்திரன்
ஜாமீன் வழங்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பிசெல்வன் ரோந்து பணியில் இருந்த பெண் காவலரை குடிபோதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டி மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இவர் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால், ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யபட்டது. சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு மோசமாகி விட்டது. மேலும் மனுதாரர் நடந்து கொண்ட விதம் ஏற்கதக்கதல்ல என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி குபேந்திரனுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். ஏற்கனவே கடந்த மாதம் ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்டது.
மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ