தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியை அறிவிப்பு!
தொடர்மழை காரணமாக நாக்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்!!
தொடர்மழை காரணமாக நாக்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்!!
தேனி, நாகை, கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி, நாகை மாவட்டத்தில் சீர்காழி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி இருந்த நிலையில், இன்று மழை பெய்து வருகிறது. கனமழை நீடித்து வருவதன் காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.