வரவிருக்கும் அரசு விடுமுறை நாட்களில், TASMAC கடைகளுக்கு விடுமுறை விடுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...


"திருவள்ளுவர் தினம். குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய தினங்களை முன்னிட்டு வருகின்ற ஐனவரி 15, 26, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள் ) விதிகள் 2003. விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமப் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 FL2 உரிமப் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் FL3(A) உரிமம் கொண்ட பார்கள், அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வெண்டும் எனவும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூவுடாது எனவும் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது’


என குறிப்பிட்டுள்ளார்.