காதல் தம்பதி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் துர்கேஷ்(25). இவர் கூலி வேலை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. துர்கேஷிக்கு 2017ம் ஆண்டு சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். துர்கேஷூக்கு அப்பகுதியில் நண்பர்கள் இருந்துள்ளனர். அவர் வீட்டுக்கு அருகில் இருந்த நட்ராஜூக்கு, துர்கேஷ் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் முறைதவறிய காதலாகவும் மாறியிருக்கிறது. 


மேலும் படிக்க | அடுத்த 48 மணிநேரமும் மழை தான்... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - முழு விவரம்


வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி


இந்த விவகாரம் கணவர் துர்கேஷூக்கு தெரியவந்திருக்கிறது. கடும் மன உளைச்சல் அடைந்த துர்கேஷ் மனைவி சோனியாவை அழைத்துக் கொண்டு கர்நாடகா சென்று குடியேறியுள்ளார். ஆனால் அங்கும் சென்ற நடராஜ் துர்கேஷின் மனைவி சோனியாவை வீட்டைவிட்டு அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக துர்கேஷ் பேரிக்கை காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் நட்ராஜ் மற்றும் சோனியா பேரிக்கை காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது ஊர் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் துர்கேஷை சமாதானப்படுத்தி சோனியாவை அவருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  


துர்கேஷ் படுகொலை


இது தொடர்பாக நட்ராஜ், துர்கேஷ் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். அத்துடன் மது என்ற நண்பருடன் சேர்ந்து துர்கேஷை தொடர்ச்சியாக சீண்டி வந்துள்ளார்.  இதில் உட்சபட்சமாக துர்கேஷின் வீட்டுக்குள் சனிக்கிழமை நள்ளிரவு புகுந்த நட்ராஜ், மது உள்ளிட்ட மூன்று பேர் துர்கேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் துர்கேஷ். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பேரிக்கை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து நட்ராஜ் மற்றும் மது ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் கொலையில் ஈடுபட்ட இன்னொருவரையும் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் ஒசூர் முதுகுறுக்கி கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் - காரணம் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ