இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்: எச்சரித்த வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடைக்கால தொடக்க அறிகுறியாக தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.