சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சென்னைக்கு திரும்புகிறார். தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாகவே சசிகலாவின் வருகையை ஆதரித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகள் வெளியாகி வைரலாகின்றன. டிவிட்டரில் மகிழ்ச்சி அலை அடிக்கிறது. #TNwelcomeசின்னம்மா என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டிரண்டாகி வருகிறது. 



சசிகலாவுக்கு பெங்களுருவில் இருந்து சென்னை வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தினகரனும், அமமுக கட்சியும் பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். 


சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். விடுதலைக்கு சில நாட்கள் முன்னதாக சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.


Also Read | Sasikala Returns: விடுதலையைத் தொடரும் விடுகதைகள்: விடை தருமா சசிகலா வருகை?


மருத்துவமனையில் இருக்கும்போதே சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்தாலும், சில நாட்கள் பெங்களூருவில் ஓய்வெடுத்த பின்னர், இன்று சென்னைக்கு திரும்புகிறார். சிறைவாசத்தை முடித்து விட்டு தமிழகம் வருகை தரும் சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பு தான் அவரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற கணக்கில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். பெங்களுருவில் இருந்து சென்னை வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மும்முரமடைந்துள்ள நிலையில், சசிகலாவின் வருகை புயலை ஏற்படுத்துமா அல்லது புயல் அமைதியாக கரையைக் கடக்குமா அல்லது எதிர்பாரா விதமாக வேறு இடத்திற்கு திசை திரும்புமா என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்திய அரசியலே கூர்ந்து கவனிக்கிறது.


Also Read | Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR