தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையைப் பொறுத்தவரை 7 இடங்களில் உண்ணாவிரதம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்த சூழலில் காவல் துறை தரப்பில் ஒரு இடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.


 



அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு. நாகராஜன், இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேடையில் பேசிய ராதாரவி, இந்தியாவிலேயே மோடியும், அமித் ஷாவும் பெரிய அக்யூஸ்ட்டுங்க ஜாக்கிரதை என்றார். இதனையடுத்து அவரது பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.



இந்நிலையில் போராட்டின்போது மேடையில் பேசிய வினோஜ், தமிழ்நாடு அரசையும், மு.க. ஸ்டாலினையும், திமுகவினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.


மேலும் படிக்க | ஆட்டோ மெர்சிடிஸை பின்னுக்குத் தள்ளியது: உத்தவ் தாக்கரேவை குத்திக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே


அந்தச் சமயத்தில், “காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி சீர்கெட வேண்டுமென்பதற்கு அண்ணாமலையிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது வினோஜ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 


 



பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருவர் அக்யூஸ்ட் என்கிறார். ஒரு கட்சியின் மாநில தலைவர் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பார் என்று மற்றொருவர் பேசுகிறார். இப்படியே போனால் தமிழ்நாட்டில் எப்படி தாமரை மலரும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


அதுமட்டுமின்றி, இதுபோன்ற நிர்வாகிகளை வைத்துக்கொண்டு அண்ணாமலை எப்படி கமலாலயத்தில் காலம் தள்ளுகிறாரோ எனக் கூறி, அவர்களை அவர்களே கலாய்த்துக்கொண்டால் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு என்ன வேலை இருக்கிறது எனவும் கவலையடைந்துள்ளனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR