Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பலருக்கும் நேற்றே அவர்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் கிரெடிக் ஆகியுள்ளது. இந்த நிலையில் இதுவரை விண்ணப்பித்து தங்கள் விண்ணப்பம் தேர்வானதா அல்லது ரிஜெக்ட் ஆனதா என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று முதல் வங்கிக்கணக்குகளில் 1000 ரூபாய் செலுத்தப்படுகிறது. பலருக்கு ஒருநாள் முன்னதாக நேற்றே இந்த தொகை செலுத்தப்பட்டது. 


மேலும் படிக்க - பொருளாதார உரிமையும் பெண்களின் விடுதலையும்-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செய்த மாற்றம்!


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசானையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியில்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. அதாவது அரசு யாரெல்லாம் இந்த தொகையை பெற தகுதியுடையவர்கள் என ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தது. அரசு மற்றும் அரசு சார்ந்த பணியில் இருந்து விண்ணப்பித்த 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள், கார்  மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்போர், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு கொண்ட குடும்பங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் விதிகள் படி நிராகரிக்கப்பட்டு உள்ளன.


அரசு கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி தான் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏழை எளிய பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் சென்று சேரும் வகையில் தான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்லது. இதனால் விண்ணப்பித்தும் தொகை வராதவர்கள் குழப்பத்தில் உள்ளனர். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ரிஜக்ட் ஆனதா என்பது குறித்த மெசேஜ் அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த நம்பருக்கு செப்டம்பர் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஒருசிலருக்கு காலதாமதமாக கூட வங்கிக்கணக்குக்கு தொகை வரலாம் என்பதால் இரு தினங்கள் அவர்கள் காத்திருப்பது நல்லது.


மேலும் படிக்க - 2021 முதல் தற்போது வரை..! முதலமைச்சர் ஸ்டாலின் முத்தாய்ப்பான திட்டங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ