Thirumana Nidhi Udhavi Thittam Tamilnadu : சாதிய பாகுபாட்டை போக்கும் வகையில் கலப்பு திருமணம் அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்கின்றன. இந்த திட்டத்தின் பெயர் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம். 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் சாதி மறுப்புத் திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார பாதுகாப்புக்காகவும் சமூக அங்கீகாரத்துக்காகவும் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நிதியைப் பெற, அரசு விதிகளின்படி தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955-ன் கீழ் திருமணத்தைப் பதிவுசெய்திருக்க வேண்டும். திருமணத்தைப் பதிவுசெய்த ஓராண்டுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். இந்தியாவில் பட்டியலின சமூகத்தின் மக்கள் தொகையை அடிப்படையாகவைத்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், இப்படி ஒரு நிதித் திட்டம் இருப்பதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. 'இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955’-ன் கீழ் பதிவுசெய்தவர்கள் மட்டுமே இந்த நிதி உதவியைப் பெற முடியும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009’-ன் கீழ்தான் திருமணங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கு திருமண பதவில் இருக்கும் இந்த சிக்கல் தடையாக இருக்கிறது. இதனால் பதிவு செய்யும்போது இந்து திருமண பதிவுச் சட்டம் 1955ன் கீழ் பதிவு செய்தால் உடனே விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க | NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோ


தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிக்க தகுதிகள் :


விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.


இந்த திட்டத்தின் நன்மைகள் ;


இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஜோடிக்கும் மத்திய அரசிடமிருந்து ரூ.2.50 லட்சம் கிடைக்கும். இரண்டு தனித்தனி தவணைகளில் பணம் வழங்கப்படும். கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


தேவையான ஆவணங்கள் : 


ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு. கூடுதல் தகவல்களுக்கு அருகில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு சென்று விசாரிக்கவும்.


இந்த திட்டம் தவிர இன்னும் சில திருமண நிதியுதவி திட்டங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு - பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ