தமிழக கேரள எல்லையில் மாநில ஒற்றுமையை பறைசாற்றும் பிரமாண்ட சுதந்திர தின பேரணி!
மாநில ஒற்றுமை பறைசாற்றும் வகையில் தமிழக கேரள எல்லை பகுதியில் இருந்து கேரளாவிற்கு பிரமாண்ட சுதந்திர தின பேரணி நடைபெற்றது.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின அமுத பெருவிழாவில் மக்கள் அனைவரும் பங்கேற்க ஏதுவாக, இல்லம் தோறும் தேசிய கொடுயை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டிகோளை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இந்த விழாவை பிரம்மாண்டமாக்கினர். இந்நிலையில், பாரதத்தின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அனைத்து மாநில கலாச்சார உடையணிந்து, நடைப்பெற்ற பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியில் இருந்து இருமாநில ஒற்றுமை மற்றும் பாரத தேசத்தின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
மேலும் படிக்க | Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்!
இந்த பேரணியில் தமிழகம், கேரளா, குஜராத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் அந்த அந்த மாநிலங்களின் கலாச்சார உடைகள் அணிந்து தேசிய கொடி ஏந்தியும் காந்தி , சுவாசந்திரபோஸ், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வேடமணிந்த மாணவ மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். 75 அடி நீளம் கொண்ட கதறால் நெய்யப்பட்ட தேசிய கொடியும் பேரணியில் இடம் பெற்றது.
தேசிய கொடியேந்தி, தமிழக கேரள எல்லை பகுதியில் துவங்கிய பேரணி பாறசாலை பாரதிய வித்தியா பீடம் பள்ளியில் முடிவடைந்தது. மாவணமாவணிகள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என தமிழகம் கேரளாவை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | Amrit Mahotsav: இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய 5 இடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ