மகன் இறந்த துக்கம்; கணவன்-மனைவி ராமேஸ்வரம் கடலில் தற்கொலை
ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் சமத்தூர் எஸ்.பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் ஆக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தனலட்சுமி கூட்டுறவு சங்கத்தில் பணியை புரிந்து வருகிறார்.
இவர்களுக்கு இருபத்தி ஒரு வயதில் ஒரே ஒரு மகன் இருந்த நிலையில் அவர் கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்துள்ளார். அதனால் துக்கம் தாங்காமல் இறந்த கணவன் மனைவி இருவரும் உடல் பாதிக்கப்பட்டு இருந்தநார்.
மேலும் படிக்க | கட்டிப்புடி வைத்தியம் செய்யும் காதல் பாம்புகள்: வைரலாகும் பாம்புகளின் ரொமான்ஸ்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சொந்த ஊரை விட்டு உறவினர்களிடம் யாரிடமும் சொல்லாமல் இவர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்கள் காணவில்லை என புகார் ஒன்றை உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் அனைவருக்கும் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இறக்கப் போகிறோம் என உறவினருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளனர். அதன்பின் இருவரும் தங்கள் இடுப்பில் பெரிய கற்களை கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனை அடுத்து கடலில் பக்தர்கள் விட்டுச்சென்ற துணிகளை எடுப்பவர்கள் உடல் கடலில் மிதப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மரைன் போலீசார் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடல்களை கடலில் இருந்து மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளனர் இதனையடுத்து உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.
மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR