சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தத்தொடு, அவர்களால் தமிழகம் பெருமை படுகிறது எனக் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் தொழிலதிபர் மற்றும் டி.வி.எஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருதும், அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த லலிதா-சரோஜ் சிதம்பரம் இரட்டையர், மனோகர் தேவதாஸ், எஸ்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.மஹபூப் மற்றும் எஸ்.எம்.சுபானி மற்றும் பேராசிரியர் பிரதீப் தலப்பி்ள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் மதிப்புமிக்க விருதைப் பெற்று மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என்று முதலவர் பழனிசாமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் "எனது மற்றும் தமிழக மக்கள் சார்பாக அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் பல விருதுகளை வென்று, தமிழகத்திற்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.


நாட்டின் 71-வது குடியரசு தினத்திற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட. மொத்தம் 141 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளில் 34 பேர் பெண்கள் மற்றும் 18 பேர் வெளிநாட்டவர் அடங்குவார்கள். அதேபோல மறைந்த 12 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.