செந்தில் பாலாஜியை “எங்கிருந்தாலும் வாழ்க” என வாழ்த்து கூறிய டிடிவி தினகரன்
செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருந்து பிரிந்த டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இணைந்தார். தற்போது இன்று (டிசம்பர் 14) தனது தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த செந்தில்பாலாஜி, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி,
தொண்டர்களின் விருப்படி, இன்று திமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன். நான் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அவர் (டிடிவி தினகரன்) என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. அது மரபும் கிடையாது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன், முன்னால் தமிழக அமைச்சரும், அதிமுகவால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏவான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டில் இருந்து செந்தில் பாலாஜியை எனக்கு நன்றாக தெரியும். நான் யாரையும் கையில் பிடித்துக் கொள்ள முடியாது. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரது சொந்த முடிவு. அவர் எங்கு சென்றாலும் நல்ல இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை". எனக் கூறினார்.