கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்து வந்த நிலையில் இன்று தனது ரசிகர் மன்ற செயலாளர்களுடன் செய்தியாளர் சந்திப்பில் ஈடுப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பின் போது ரஜினி அவர்கள் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் தற்போதும் கட்சி பெயர் குறித்த அறிவிப்புகள் ஏதும் அறிவிக்காமல் மன்ற தொண்டர்களை ஏமாற்றினார்.


சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர் தனது மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒரு பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்து அமைதி காத்தார்.


இந்நிலையில் இன்று சென்னை லீலா பேலஸ் விடுதியில் நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடாமல் வெளியேறினார்.


கூட்டத்தில் அவர் பேசியதாவது., எனது எதிர்கால அரசியல் வாழ்வு எப்படி இருக்கும் என்று தெளிவு ஏற்படுவதற்காகவே இந்த சந்திப்பு... முதன் முறையாக நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தது 2017-ல் தான். எதிர்பாரா விதமாக 1996-ல் நான் அரசியலுக்கு வருவதாக கூற்றுகள் அடிப்பட்டது. எனவே நான் 25 ஆண்டுகளாக அரசியல் வருவேன் என தெரிவித்து வருவதாக இனி யாரும் தெரிவிக்க வேண்டும்.





முந்தைய சந்திப்பில் நான் ஏமாற்றம் என குறிப்பிட்டது பலவிதமாக வெளியே வந்தன. முன்னதாக சிஸ்டம் சரியில்லை என தெரிவித்தேன், சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது. 


சிலருக்கு கட்சிப் பதவி தொழிலாக உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்தியாவசிய பதவியை தங்கள் வசம் ஆக்கிவிடுகின்றனர். இத்தகைய அரசியல் ஆரோக்கியமானது அல்ல. நான் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என நினைத்து இல்லை. அனைத்து தகுதியும் கொண்ட இளைஞர்களுக்கே முதல்வர் பதவி அளிக்கப்படும். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற அடிப்படையில் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.