அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் சர்ச்சைக்குரிய (ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு) 2.77 ஏக்கர் நிலத்தை இந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த 3 அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தது. இந்த தீர்ப்பு செல்லாது என்றும், அந்த நிலம் முழுமையாக இந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற,  முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்புக்கு இந்த மத மக்களிடையே வரவேற்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்துத்துவா கட்சிகளும் தங்கள் வரவேற்பை பதவி செய்துள்ளனர்.


இந்நிலையில், அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கருத்தினை தெரிவிக்கையில்., அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன். தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


--- அயோத்தி வழக்கு பின்னணி ---


பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்து வரும் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதன் வரலாற்று தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என சித்தரிக்கப்படும் இத்தீர்ப்பு காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்டது.


நிர்மோஹி அகாரா, உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ராம்லல்லா விராஜ்மான் இடையேயான 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை பங்கீடுதல் குறித்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30, அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அலகாபாத் உத்தரவை மேல்முறையீடு செய்யும் விதமாக இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. 


இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அன்றாட விசாரணை அடிப்படையில் விசாரித்து அக்டோபர் மாதம் தனது தீர்ப்பினை முன்பதிவு செய்தது. 


68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் முன்வந்துள்ளது.