இடைதேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் நான் பரப்புரை செய்வேன்: பிரேமலதா விஜயகாந்த்!!
என்னுடைய பிரசாரம் 4 தொகுதிகளிலும் இருக்கும்; அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும்!!
என்னுடைய பிரசாரம் 4 தொகுதிகளிலும் இருக்கும்; அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும்!!
ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி உழைக்கும் வர்க்கத்தினரை சிறப்பிக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைப்பாளர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், எதிர்க்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள்; அதில் எது உண்மை எது பொய் என்பதை சபாநாயகர், தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவிவ்த்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜாதி மோதலை ஏவிவிட்டு அதன் மூலம் யாரும் ஆதாயம் தேடக்கூடாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒரேகுலம், ஒரே இனம் ஒன்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேறும். ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டது கண்டிக்க கூடிய விஷயம். இதனால் மறு தேர்தல் நடத்த வேடும இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். பணம் விநியோகம் செய்ததனால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.
மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். உறுதியாக, தேமுதிக-ன் கூட்டணி மக்கள் வரவேற்கும் கூட்டணி. மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். அதே போல் நான்கு தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். என்னுடைய பிரசாரம் 4 தொகுதிகளிலும் இருக்கும்; அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவிவத்தார்.