படையப்பா இன்னும்  பல படங்களில் நடித்து சாதனைகளை படையப்பா என தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து..!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவாவில் 50வது சர்வதேச திரைப்படவிழா வரும் நவ 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமாவில் முக்கிய பங்காற்றியமைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை இசபெல் ஹூபர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலரும் நடிகர் ரஜினிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; 'அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும்  பல சாதனைகளை படையப்பா  என வாழ்த்துகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 



தமிழிசையின் இந்த பதிவிற்கு ஏராளமானோர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.