ஜெ., சொன்னால் ராஜினாமா செய்வேன் - சசிகலா புஷ்பா
வெங்கடேச பண்ணையாரின் 13-வது நினைவு நாளை முன்னிட்டு சசிகலா புஷ்பா அவர்க்கு அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சொன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் இன்னொருத்துற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
மேலும் அவர் வயதில் பெரியவர். அதனால் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பின்னால் இருந்து ஆளுகை செய்பவர்களை முதலமைச்சர் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.