நாடு பாதுகாப்பாக இருக்க மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம்: சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மற்றும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டு எனவும் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தன்களின் துரத்தல் பிரச்சரத்தை துவங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை முதலமைச்சர் எடப்பாடி அறிமுகம் செய்து வைத்தார்.


இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்; வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டும் என்றார். அந்த பாதுகாப்பு, வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான் என்றும், நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மக்கள் நலனை தலைமையானதாகக் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாக முதலமைச்சர் கூறினார். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரத்திற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.


தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாஜகவும், காங்கிரஸும் இன்று தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர்.