AC, Cooler, Fan வாங்க திட்டமா; மார்ச் 31க்குள் வாங்கிடுங்க.. இல்லைன்னா.....
அடுத்த மாதம் முதல், ஏசி, கூலர் மற்றும் மின் விசிறிகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சந்தையில் இருந்து வரும் செய்திகள், அடுத்த மாத தொடக்கத்தில், இதன் விலைகள் அதிகரிக்கும் என கூறுகின்றன.
கோடை காலம் தொடங்கி விட்டது. இப்போது ஏர் கண்டிஷனர், கூலர் மற்றும் மின் விசிறி தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் விலையை அதிகரிக்க தயாராகி வருகின்றன. அடுத்த மாதத்திலிருந்து, இவை மட்டுமல்ல இந்த வீட்டு உபகரணங்களின் (Home Appliances) விலையும் முன்பை விட அதிகமாக இருக்கும்
பணவீக்கம் இப்போது மின் சாதனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. செலவு அதிகரித்து வருவதன் காரணமாக, இப்போது மின் சாதனங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும். அடுத்த மாதம் முதல், ஏசி, கூலர் மற்றும் மின் விசிறிகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சந்தையில் இருந்து வரும் செய்திகள், அடுத்த மாத தொடக்கத்தில், இதன் விலைகள் அதிகரிக்கும் என கூறுகின்றன.
ஏசி சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரிக்கும்
கோடை காலம் வந்து விட்டதால், ஏ.சி.யின் தேவை அதிகமாக தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் நீங்கள் ஏசி வாங்கவில்லை என்றால், அடுத்த மாதம் இதை வாங்க அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாக, விலையை 4 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கலாம். இதன் விளைவாக ஏ.சி.யின் விலை 1500 முதல் 2000 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.
ALSO READ | உங்கள் iPhone கனவு நிறைவேறலாம்... அதிரடி விலையில் iPhone 12 .. காரணம் என்ன..!!
அதிகரித்துவரும் உற்பத்தி செலவுகள் இதற்கு காரணம் என மின் சாதன நிறுவனங்கள் கூறுகின்றன. பாலிமர்கள், தாமிரம், எஃகு, பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. செப்பு விலை சாதனை அளவை எட்டியுள்ளது. இதனால் மின்சார வீட்டு உபகரணங்கள் விலை அதிகரிக்கும். கூலரின் விலையையும் 1 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கலாம்.
தாமிரம் விலை உயர்ந்ததால், மின் விசிறியை தயாரிக்கும் செலவும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக அதன் விலையும் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக கோடை கால விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. நிதிக் பற்றாக்குறை, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக, மக்கள் பொருட்களை வாங்கவில்லை, இதன் காரணமாக வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கொரோனாவை தோற்கடித்து நாடு முன்னேறி வருவதால், அது சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஒவ்வொரு நம்பிக்கையும் உள்ளது. மக்கள் தேவைக்கேற்ப ஷாப்பிங், நிறுவனம் அதிக உற்பத்தி செய்யும் மற்றும் பொருளாதாரம் முன்பு போலவே இயல்பு நிலைக்கு வரத் தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ALSO READ | ஏப்ரல் 1-க்கு முன்பாக செய்ய வேண்டிய முக்கிய பணிகள்.. இல்லையென்றால் இழப்பு நேரிடும்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR