நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது என  நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் கடைகள், கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
 
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதற்க்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிந்த்ரானர். இந்நிலையில், நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது என  நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார். 


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... CAA சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் தான் முதல் ஆளாக நானே இறங்கி போராடுவேன் என்று கூறியிருந்தேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் டில்லியில் ஏற்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது. இது உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன். மதத்தை வைத்து சில கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. எனக்கு தெரிந்து CAA சட்டமாகிவிட்டதால், இனி அதை திரும்ப பெற மாட்டார்கள் என நினைக்கிறேன். 


டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும். இது போன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கிள்ளி எறியவேண்டும். ஊடகங்கள் எது நியாயம் என்பதை எடுத்து சொல்லவேண்டும். என்ஆர்சி., பற்றி மத்திய அரசு தெளிவாக எடுத்துக்கூறியும் குழப்பம் எதற்கு?... 


அமைதியாக போராடுவது தவறில்லை; அது வன்முறையாக மாறக்கூடாது. தற்போது நடக்கும் போராட்டம் எல்லை மீறி செல்கிறது. இதனை ஆரம்பத்திலேயே இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும். எது உண்மையோ அதை சொல்கிறேன். ஆனால் என்னை BJP-யின் ஊதுகுழல், BJP-யின் பின்னால் நிற்கிறேன் என விமர்சிக்கின்றனர். மூத்த அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கூட இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.