தம்மையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்பது தெரிந்துவிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; ரெயில்வே துறை தேர்வை தமிழில் தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தாதது ஏன்? தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறது. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு அதனால் எந்த பயனும் இல்லை.


ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. முரசொலியில் தம்மைப்பற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், அப்பத்திரிகையில் தம்மைப் பற்றி தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.


மேலும், என்னை ஜோக்கர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளார். என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும். நாங்குநேரி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரசார் தன்மானம் உள்ளவர்கள், திமுக போட்டியிட்டால் தன்மானம் இல்லாதவர்கள்.


ஜென்டில்மேன் அக்ரிமெண்டை கடைப்பிடிப்பது அ.தி.மு.க. தான். பா.ம.க.விற்கு ஒரு ராஜ்ய சபா கொடுத்துள்ளோம். ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டோம். ஆனால் திமுக ஜென்டில்மேனாக இருப்பார்களா என்று கூற முடியாது. இஸ்ரோ அடுத்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும்" என அவர் தெரிவித்தார்.