தண்ணீரில் மூழ்கியவர்களை துகில் தந்து உயிர் காத்த வீர தமிழ் பெண்கள்..!!!
பெரம்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை அணையின் நீரில் மூழ்கி இறக்க இருந்த இளைஞர்கள் இருவரை, மூன்று பெண்கள் காப்பாற்றினர்.
தமிழ்நாட்டின் பெரம்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை அணையின் நீரில் மூழ்கி இறக்க இருந்த இளைஞர்கள் இருவரை, அங்கிருந்த மூன்று பெண்கள் காப்பாற்றினர்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொட்டரை கிராமம் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 12 இளைஞர்கள் குழு கிரிக்கெட் விளையாடச் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் விளையாடி களைத்த பிறகு, அவர்கள் கொட்டரை அணையில் குளிக்க கிராமத்திற்குச் சென்றனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், அணையில் நீரின் ஆழம் 15 முதல் 20 அடி வரை என இருந்தது.
இந்த இளைஞர்கள் அங்கு குளிக்க வந்த போது, செந்தமிழ் செல்வி (38), முத்தம்மாள் (34), அனந்தவள்ளி (34) ஆகிய பெண்கள் குளித்துவிட்டு துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்கள்.
ALSO READ | பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!
“நாங்கள் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் அணையைச் சுற்றிப் பார்த்து, இங்கே குளிக்கலாமா என்று எங்களிடம் கேட்டார்கள். தண்ணீர் ஆழமாக இருக்கும் என்று அவர்களுக்கு எச்சரித்தோம். ஆனால் நான்கு இளைஞர்கள் எப்படியோ விழுக்கி விழுந்தனர்” என்று அந்த மூன்று பெண்களில் ஒருவர் தெரிவித்தார்.
நான்கு பேர் வழுக்கி விழுந்தவுடன், எதையும் யோசிக்காமல், அவர்கள் புடவைகளை களைந்து தண்ணீரில் வீசினர். அவர்கள் இரண்டு இளைஞர்களை காப்பாற்றீ விட்டனர். ஆனால் மற்ற இருவர் நீரில் மூழ்கினர்.
ALSO READ | ராஜஸ்தான் அரசியல் சண்டை முடிவுக்கு வருமா? ராகுல்- பிரியங்காவை சந்தித்த சச்சின் பைலட்
இந்த பெண்கள் துணிச்சலுடன் உடனடியாக செயல்பட்ட விதத்தை இப்போது சமூக ஊடகங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். ”அவர்கள் வீர விருதுக்கு தகுதியானவர்கள்! மனிதநேயம் இன்னும் உள்ளது என்ற பொதுமக்களுக்கு உணர்த்த, மக்களை ஊக்குவிக்க, தொலைக்காட்சி சேனல்களில் இவர்கள் துணிச்சல் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என எழுதினார். ”
இறந்தவர்களின் உடல்கள் பெரம்பலூர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.