தமிழகம் பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வீரர்கள் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு போட்டியில் 460 காளைகள் காலத்தில் அவிழ்ந்து விடப்பட்டன. நேரம் இல்லாத காரணத்தால் 300 காளைகள் அவிழ்த்து விடப்படவில்லை என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்தது.


அதை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் தினமான இன்று ஜன.,15-ம் தேதி பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.


இந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் 1000 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்தினர்.


இந்நிலையில், 460 காளைகள் காலத்தில் அவிழ்ந்து விடப்பட்டன. நேரம் இல்லாத காரணத்தால் 300 காளைகள் அவிழ்த்து விடப்படவில்லை என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 


முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 23பேர் காயமடைந்தனர்.  காயமடைந்த 23 பேரில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது