கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை
![கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/05/10/115559-kodanad-estate.jpg?itok=cuJ70mcc)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 8 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது சில ஆவணங்கள் திருடு போனதாக செய்திகள் வெளியாகியிருந்ன.
இந்நிலையில் கொடநாடு பங்களா தொடர்பான சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.