அதிகரித்த முதல்வர் பழனிச்சாமியின் சொத்து மதிப்பு :முழு விவரம்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து விவரம் ஐந்து வருடத்தில் 116 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இந்திய மாநில முதல் அமைச்சர்களின் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும், குறைவான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளது. ஏழு ஒன்றியப் பகுதிகளும் உள்ளது. ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.177 கோடி. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற அந்தஸ்தை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
அதேபோல குறைவான சொத்து வைத்திருப்பவர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ 27 லட்சம் ஆகும். இந்தியாவின் ஏழை முதல்வர் என்ற அந்தஸ்தை மாணிக் சர்க்கார் பெற்றுள்ளார்.
மாநில முதல் அமைச்சர்களின் சொத்து விவர பட்டியலில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 12_வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 7 கோடியே 80 லட்சத்து 66 ஆயிரத்து 586 ரூபாய்.
அசையும் சொத்து: 3,14,16,006
அசையா சொத்து: 4,66,50,580
மொத்த சொத்து : 7,80,66,586.
ஆனால் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் 3.67 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி காட்டிய சொத்து மதிப்பையும், ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்ட சொத்து மதிப்பையும் வைத்து பார்த்தால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு 116 சதவீதம் உயர்ந்துள்ளது.
2011-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி சொத்து விவரம்(வேட்பு மனு)