அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் (All India Professionals' Congress) சார்பில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. "India Let's Spin The Chakra Again" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் சேர்மன் பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்வில் கோவை மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியா எவ்வாறு ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பது? ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் எவ்வாறு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது? என்பது குறித்த விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது. பங்கேற்பாளர்கள் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியில் காணப்படும் இறக்குமதி வரி, சுங்கவரி உள்ளிட்ட பலவற்றை பற்றி கேள்விகளை எழுப்பினர்.


மேலும் படிக்க | சமந்தாவிடம் பகிரங்க மனிப்பு கேட்ட தெலங்கானா பெண் அமைச்சர்


பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் போட்டி போட வேண்டும் என்று நினைப்பது பகல் கனவு என்றும், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பொருட்களை உள்நாட்டு சந்தையில் மட்டும்தான் விற்க முடியும் என்றும் கூறினார். 1991 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய அவர், கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம், உலகில் போட்டிப் பொருளாதாரமாக வர முடியாது என்றார்.


ஜவுளித்துறையில், நிரந்தர தொழிலாளர்கள் இல்லை என்றும் எல்லா தொழிலாளர் சட்டமும் மீறப்படுகிறது என்றும் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், ஆனாலும் தொழில் நடப்பதாகவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வருவதாகவும் கூறினார். எனவே ஜவுளித்துறையில் தொழிலாளர் இல்லை என்பது பிரச்சனையாக இல்லை என்றும், தொழில்நுட்பமும் கட்டுப்பாடுகளும் தான் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறிய அவர், இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.


விண்வெளி ஆராய்ச்சியிலும் அணு ஆயுதத்திலும் உலக நாடுகளுக்கு ஈடான தொழில்நுட்பத்தை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள் என்றும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கான தொழில்நுட்பத்தையும் நம் விஞ்ஞானிகளால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறிய சிதம்பரம், இதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை என்றார். தொழில்நுட்பமும் அளவும் பெரும் தடைகளாக இருப்பதாகவும் இந்த தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் ப சிதம்பரம் கூறினார்.


மேலும் படிக்க | திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ