தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்.. வெளியே செல்வதை தவிர்க்கவும் -IMD எச்சரிக்கை
Weather Update in Tamil Nadu: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வெப்பம் மற்றும் மந்தமான வானிலை இருக்கும்.
Temperature Rise Alert in Tamil Nadu: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் லக்னோ உள்ளிட்ட சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் வலுவான காற்றழுத்த தாழ்வு காரணமாக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவில் அதிக கனமழை பெய்யும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எதிர்பார்க்கிறது. டெல்லியில் மிகக் குறைந்த அளவே மழை பெய்யக்கூடும் என்றும் ஐஎம்டி குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் மழை பெய்யும்
அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்ய அதிக சாத்தியமுள்ள இடங்களை ஐஎம்டி கணித்துள்ளது. அதேபோல அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் தனித்தனி இடங்களில் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
தென் இந்தியாவில் வெப்ப அலை வீசும்
மறுபுறம் மத்தியப் பிரதேசம், கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகளில் வெப்ப அலை அதிகமாக இருக்கும். சத்தீஸ்கர், மராத்வாடா, மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் வடக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் இரவிலும் அதிக வெப்பமாக இருக்கும். கடலோர ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், ராயலசீமா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வெப்பம் மற்றும் மந்தமான வானிலை இருக்கும்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை வரும் நாட்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அனேக இடங்களில் 38 முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மதிய வேளையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - வந்தாச்சி கோடை சுடும் வெயில்.. இந்த உணவுகளுக்கு இனி 'NO' சொல்லுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ