எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. 2018-ஆம் ஆண்டிற்கான எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலை உலக வங்கி இன்று வெளியிட்டது. 



இந்த பட்டியலில் இந்தியா 77-வது வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


190 நாடுகளின் வர்த்தகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறியிருப்பதற்கு காரணம் GST, Make in India திட்டம் போன்றவை தான் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் திணைக்களத்தின் (DIPP) செயலாளர் தெரிவிக்கையில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 'சிறந்த 10 இட' முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்தார். கடந்தாண்டு பட்டியலில் இந்தியா 100-வது இடத்தை பிடிக்கையில் 30 இடங்கள் முன்னேறியதாகவும், இந்த முன்னேற்றமானது இந்திய தொழில்துறைக்கு பெரும் முன்னேற்றம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு பட்டியலின் படி இந்தியா தெற்காசிய நாடுகளில் 6-வது பிடித்திருந்தது, ஆனால் தற்போது தெற்காசி நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது எனவும் தெரிவித்தார்