இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களையும் அவர்களுடைய இரண்டு படகுகளையும் யாழ்ப்பாணம் கோவளம் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 தினங்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்பு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தீபாவளி திருநாளுக்கு புத்தாடை இனிப்புகளை வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என சிறையில் இருந்த மீனவர்களுடன் செந்தில் தொண்டைமான் உறுதி அளித்ததுடன் தமிழக மீனவர் சங்கத் தலைவர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.
ALSO READ | வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு
அவர் கொடுத்த உறுதியின் அடிப்படையில் மீனவர்கள் 23 பேரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது மீனவர்கள் பிடிப்பதற்கான அனைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் இருபத்தி மூன்று பேரும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | கோவிலை விட்டுட்டு கல்வியை பாருங்க: கண்டித்த உயர்நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR