போர் பயிற்சியின் போது போர் விமானம் பழுதாகி விபத்து!
அரக்கோணம் பகுதியில் INS ராஜாளி கடற்படை பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது!
ராஜாளி: அரக்கோணம் பகுதியில் INS ராஜாளி கடற்படை பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது!
அரக்கோணம் பகுதியில் உள்ள கனள்கனை விமான பயிற்சி மையமான INS ராஜாளியில் இன்று காலை Chetak CH442 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இன்று காலை பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது திடீரென பழுதாகி விழுந்து நொறுங்கியது.
எனினும் இந்த விபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் பழுதடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூரில் இந்திய விமானப் படையின் MiG 27 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் முடிந்து ஒரு மாதம் முடிவடைவதற்கு முன்னதாக தற்போது மீண்டும் ஒரு போர் விமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.