மதுரை மக்களவை தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மக்களவை தொகுதியில் சுயேச்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன். இவர் மதுரை மக்களவை தொகுதியில் மறு தேர்தல் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது...


தான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதாகவும், கடந்த 18-ஆம் நாள் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.


3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அரங்கில் கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.


இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது இடைநீக்கம் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆய்வாலர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடைப்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.