1944-ஆம் ஆண்டு ராமநாதபுரம் கீழக்கரையில் சையது காதர் சீனி முகமது- ஆயிஷா தம்பதியனரின் 4-வது மகனான சாகுல் ஹமீத், தான் சாகித்ய அகடாமி விருதின் சொந்தகாரரான இன்குலாப்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்த இவர், மாணவர் பருவத்தில் திமுகவில் இருந்தவர், பிற்காலத்தில் கம்யூனிசத்தில் நாட்டம் கொண்டவர். 35 ஆண்டுகள் புதுக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிராயராக பணியாற்றிய இவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, காவலர்களால் அடித்து குப்பை தொட்டியில் வீசப்பட்டவர். 


பின்னர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட தொடங்கினார். இவரது 'மனுஷங்கடா, நாங்க மனுஷங்கடா'  என்ற கவிதை, ஒடுக்கப்பட்ட மக்களின் எல்லா மேடைகளிலும் இப்போதும் ஒலிக்கிறது. தமிழ்தேசிய சிந்தனை மற்றும் ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளித்தவர். விடுதலை புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசியுள்ளார்.


படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசர், எழுத்தாளர் பா.செயபிரகாசம் உள்ளிட்டோர் உடன் படித்தவர்கள். கவிஞர் மீராவின் மாணவர் இவர்.


1967-இல் கமருனிஷா என்பவரை திருமணம் செய்த இவருக்கு  செல்வம், இன்சுலாப் என்ற இருமகன்களும், ஆமினா பர்வீன் என்ற மகளும் உள்ளனர். கவிதை எழுத புனைப்பெயர் தேவைப்பட்டதால்  தம் பெயரை இன்சுலாப் என வைத்துக்கொண்டார்.


இவரது கண்மணிராஜம் என்ற கவிதை சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பாடப்பிரிவில் இடம் பெற்றது. ராஜராஜ சோழனின் கால்கோள் விழாவை எதிர்த்து கடுமையாக கவிதை எழுதியதால் விமர்சிக்கப்பட்டவர். காந்தல் நாட்கள், புலிநகச்சுவடுகள், வெள்ளை இருட்டு உள்ளிட்ட 12 கவிதை நூல்களும், பாலையில் ஒரு சுனை என்ற சிறுகதை தொகுப்பு, ஔவை, மணிமேகலை உள்ளிட்ட 8 நாடக நூல்களும், 'ஆனால்' , 'எதிர்சொல்' ஆகிய கட்டுரை தொகுப்புகளும் எழுதியவர்.


அம்பேத்கர் சுடர் விருது, கவிக்கோ விருது, வைரமுத்து விருது பெற்ற இவர், 2008-இல் தமிழக அரசால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை, 2009-இல் இலங்கை இனப்படுகொலைக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என திருப்பி தந்தவர்.


தமது உடலை தானமாக தர வேண்டும் என்ற அவரது உயிலின் படி, கடந்த ஆண்டு டிசம்பர் 16 -இல் உடல் நல குறைவால் உயிரிழந்த இவரது உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு தானமாக தரப்பட்டது.


இந்த நிலையில் தான் இவருக்கு காந்தல் நாட்கள் கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவரது குடும்பத்தினர் இந்த விருதை ஏற்க மறுக்கின்றனர்.


இன்குலாப் வாழும் காலத்திலேயே விருதுகளை வாங்க மறுத்திருக்கிறார். அரசு முகம் மாறலாம் ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என கூறி விருதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் அவரது மகன் இன்குலாப். 


இந்த விருதை ஏற்றுக்கொள்வது தம் தந்தை வாழ்ந்த வாழக்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பது எனவும் கூறும் அவரது மகன் மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் அனைவருமே விருதை ஏற்க மறுக்கின்றனர்.